2-வது சுற்றில் அரினா சபலென்கா!!

பாரிஸ்:
பி​ரான்​ஸின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதன் 3-வது நாளான நேற்று மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்றில் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலென்கா, 50-ம் நிலை வீராங்​க​னை​யான ஸ்பெ​யினின் ஜெசிகா பவு​சாஸ் மனேரோவை எதிர்த்து விளை​யாடி​னார்.

இதில் சபலென்கா 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

16-ம் நிலை வீராங்​க​னை​யான ஜப்​பானின் நவோமி ஒசாகா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்​கில் 47-ம் நிலை வீராங்​க​னை​யான ஜெர்மனி​யின் லாரா சீக்​மண்​டை​யும், 4-ம் நிலை வீரராங்கனையான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த டெய்​லர் டவுன்​சென்​டை​யும், 17-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் இவா ஜோவிக் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் 37-ம் நிலை வீராங்​க​னை​யான பிலிப்​பைன்​ஸின் அலெக்​சாண்ட்ராவை​யும் தோற்​கடித்து 2-வது சுற்​றில் நுழைந்​தனர்.

ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 46-ம் நிலை வீர​ரான குரோஷி​யா​வின் மரின் சிலிச் 6-7 (4-7), 2-6, 1-6 என்ற செட் கணக்​கில் வைல்டு கார்டு வீர​ரான பிரான்​ஸின் மோயிஸ் குவாமே​விடம்​ தோல்​வி அடைந்​தா​ர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *