இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த அறிக்கை காரணமாக “இசட்” பிரிவு பாதுகாப்பு..!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த அறிக்கை காரணமாக, அவருக்கு விஐபிகளுக்கு வழங்கப்படும் ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் அடங்கிய இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரியின் உயிருக்கு சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

அதைத்தொடர்ந்து டெல்லியிலும், அவருடைய அலுவலகத்திலும் தவிர நாடு முழுவதும் ராஜீவ்குமார் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போதும் இந்த உயரிய பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சகம் இந்தப் பணிக்காக 40 – 45 பேர் அடங்கிய குழுவை மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் ஒப்படைத்துள்ளது. இந்த ஆயுதமேந்திய குழுவினர் தலைமைத் தேர்தல் ஆணையர் நாடு முழுவதும் பயணம் செய்யும்போது அவருடன் பயணிப்பர்” என்ற தெரிவித்தனர்.

நாட்டில் ஏப்ரல் 19-ம் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“சுதந்திரமான நியாயமான தேர்தலின் பாதுகாவலராக ராஜீவ் குமார் பல்வேறு சவால்கள் மற்றும் எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது.

குறிப்பாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவருக்கு நாடு முழுவதும் இசட் பிரிவுபாதுகாப்பை நீட்டிக்க மதிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மாதிரி தேர்தல் நடத்தை விதி அமலாக்கத்தின் போது நாடு தழுவிய பயணங்களை அவர் மேற்கொள்ள நேரிடும். குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான அவரது இடைவிடாத முயற்சிகள் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளன.

அவர் வகித்து வரும் சிக்கலான பொறுப்புகளுக்கு மத்தியில் ராஜீவ் குமாரின் பாதுகாப்பை உறுதி செய்வது முதன்மையான விஷயமாக மாறி உள்ளது. அவரது பதவியுடன் தொடர்புடைய உள்ளார்ந்த அபாயங்களை ஒப்புக்கொண்டு உயரிய இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1984-வது பேட்சை சேர்ந்த ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ராஜீவ் குமார், கடந்த மே 15, 2022-ல் நாட்டின் 25-வது தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக அவர், 2020-ம் ஆண்டு செப்.1-ம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *