பரந்​தூரில் விமான நிலை​யத்​துக்கு பதில் சிப்காட் அமைக்க அரசு முனைந்​தால், அதை எதிர்த்து விவ​சா​யிகளுக்கு ஆதர​வாக நாங்​கள்​ நிற்​போம்​ – வேல்முருகன் உறுதி!!

சென்னை:
தமிழக வாழ்​வுரிமைக் கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை:

பரந்​தூரில் ரூ.34 ஆயிரம் கோடி செல​வில் பசுமை வெளி விமான நிலை​யத்தை 2030-ம் ஆண்​டுக்​குள் அமைக்க மத்​திய மற்​றும் மாநில அரசுகள் திட்​ட​மிட்​டுள்​ளன.

இதற்​காக பரந்​தூர், வளத்​தூர், குணகரம்​பாக்​கம், சிங்​கி​லி​பாடி, மகாதே​விமங்​கலம் உள்​ளிட்ட 20-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களில் 5,746 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்த அரசு முடிவு செய்​துள்​ளது.

கடந்த ஆண்டு ஜன. 20-ம் தேதி அன்று தவெக தலை​வர் விஜய், பரந்​தூர் விமான நிலைய எதிர்ப்​புப் போராட்​டக்​காரர்​களுக்கு ஆதர​வாகப் பேசி​னார்.

ஆட்​சிக்கு வந்த பின்​னர் முதல்​வர் விஜய் இத்திட்டம் குறித்த ஆலோ​சனை​யில், கையகப்​படுத்​தப்​பட்ட சுமார் 1,700 ஏக்​கர் நிலத்​தில் சிப்​காட் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

தற்​போது நிலம் கையகப்​படுத்​தும் பணி​கள் நிறுத்​திவைக்​கப்​பட்​டுள்​ளன.

பரந்​தூரில் விமான நிலை​யத்​துக்கு பதில் சிப்காட் அமைக்க அரசு முனைந்​தால், அதை எதிர்த்து விவ​சா​யிகளுக்கு ஆதர​வாக நாங்​கள்​ நிற்​போம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *