திருப்பதியில் முடிகாணிக்கை கொடுத்த பாடகி பி.சுசீலா

பிரபல பழம்பெரும் பாடகி பி.சுசீலா பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்தவர். சிறந்த பின்னணி பாடகிக்கான ஐந்து தேசிய விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பெற்றவர்.

தென்னிந்திய சினிமாவில் பெண்ணியத்தை வரையறுத்த பாடகியாக இவர் பாராட்டப்படுகிறார். சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை தனது இனிய குரலால் பாடியுள்ள இவர் முதல் தேசிய விருது பெற்ற பாடகி என்ற பெருமைக்குரியவர்.

தெலுங்கு, தமிழ் ,கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒடியா ,சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் பாடியுள்ள இவர் சிங்கள படங்களுக்கும் பாடி அசத்தியுள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

88 வயதாகும் பி. சுசீலா வயது முதிர்வு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் திருப்பதியில் நேர்த்திக்கடனாக முடியை காணிக்கைக்காக செலுத்தி பாடகி பி.சுசீலா வழிபாடு நடத்தினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *