தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலத் தொடக்கம் !!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரிய கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதே போல் இந்த ஆண்டு கடந்த 6ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு தினமும் காலை – மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

பெரிய கோவிலில் இருந்து தியாகராசர் – கமலாம்பாள் உற்சவமேனிகள் தேரில் எழுந்தருள மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

43 டன் எடையும் – 35 அடி உயரமும் கொண்ட தேரினை ஏராளமான பக்தர்கள் தியாகேசா – ஆருரா, பெருவுடையார் என கோஷங்கள் விண்ணதிர எழுப்பி தேரினை இழுத்தனர்.

தேரினை முன்னிட்டு தஞ்சை மாநகரம் திருவிழா கோலம் பூண்டிருந்தது. மேலும், இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவினை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *