டாஸ்​மாக் ஊழியர்​களைப் பணி நிரந்​தரம் செய்​வதற்​கான வாய்ப்பு உள்​ளது; ஆனால், அதற்கு ஊழியர்​கள் சற்று பொறுமை​யாக இருக்க வேண்​டும் !! அமைச்சர் விக்னேஷ் தகவல்..

திண்டுக்கல்: ​
டாஸ்​மாக் ஊழியர்​களைப் பணி நிரந்​தரம் செய்​வதற்​கான வாய்ப்பு உள்​ளது. ஆனால், அதற்கு ஊழியர்​கள் சற்று பொறுமை​யாக இருக்க வேண்​டும் என மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்​வைத் துறை அமைச்​சர் விக்​னேஷ் தெரி​வித்​தார்.

திண்​டுக்​கல் மாவட்​டம் ரெட்​டி​யார்​சத்​திரத்​தில் மத்​திய மாவட்ட தவெக மகளிர் அணி அமைப்​பாளர் அலு​வல​கத்தை அமைச்​சர் விக்​னேஷ் திறந்து வைத்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது:

முதல்​வரிடம் திண்​டுக்​கல்​லின் தற்​போதைய நிலை​மையை தெரி​வித்​தேன். அப்​போது, திண்​டுக்​கல் மாவட்​டத்​துக்கு முன்​னுரிமை அளித்து தேவை​யான திட்​டங்​களை உடனடி​யாக மேற்​கொள்ள முதல்​வர் உத்​தர​விட்​டார்.

திண்​டுக்​கல்​லில் புதிய புறநகர் பேருந்து நிலை​யம் அமைய உள்ள இடம் விரை​வில் முடிவு செய்​யப்​படும்.

டாஸ்​மாக் கடைகளில் பாட்​டிலுக்கு 10 ரூபாய் கூடு​தலாக வாங்​கு​வது தற்​போது ஓரளவுக்​குக் குறைந்​துள்​ளது. தமிழ்​நாடு முழு​வதும் எந்தவொரு டாஸ்​மாக் கடை​யிலும் எம்​.ஆர்​.பி. விலைக்கு மேல் மது​பானங்​களை விற்​கக் கூடாது என்​ப​தில் அரசு உறு​தி​யாக இருக்​கிறது.

சில எதிர்க்​கட்​சிகள் டாஸ்​மாக் ஊழியர்​களை தூண்​டி​விட்​டுத் தவறான வழி​யில் கொண்டு செல்ல முயல்​கின்​றனர்.

டாஸ்​மாக் ஊழியர்​கள் தங்​களின் ஊதி​யத்தை உயர்த்தி வழங்க வேண்​டும் என்று கோரிக்கை விடுத்து வந்​தனர்.

இதையேற்று டாஸ்​மாக் ஊழியர்​களின் ஊதி​யம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 வரை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. டாஸ்​மாக் ஊழியர்​களைப் பணி நிரந்​தரம் செய்​வதற்​கான வாய்ப்​பு​கள் இருக்​கின்​றன.

ஆனால், அதற்கு ஊழியர்​கள் சற்று பொறுமை​யாக இருக்க வேண்​டும்.

ஒப்​பந்​தங்​களில் கமிஷன் வாங்​கும் கலாச்​சா​ரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்​படும்.

திண்​டுக்​கல்​லில் கடந்த காலங்​களில் இருந்​தவர்​கள் மக்​கள் நலனில் அக்​கறை காட்​ட​வில்​லை. தேர்​தல் நேரத்​தில் வாக்​குக்கு பணம் கொடுத்​தால் போதும் என்ற எண்​ணத்​திலேயே அவர்​கள் செயல்​பட்​டனர்.

ஆனால், இனி அந்த நிலை நீடிக்​காது. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *