முதல்வர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்துக்கு நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வரவேற்பு !!

சென்னை:
முதல்வர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்துக்கு நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது.

அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன்.

அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்​வ​ராகப் பதவி​யேற்​றுக் கொண்​டார்.

அப்போது, குழந்​தைகள், பெண்​களின் பாதுகாப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்படை உரு​வாக்​கப்​படும் என்று அறி​வித்த அவர், பதவி​யேற்பு விழா மேடை​யிலேயே அதுதொடர்​பான கோப்​பில் கையெழுத்திட்​டார்.

இந்நிலையில், சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை திட்டத்தை முதல்​வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *