மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அஞ்சலி !!

சென்னை:
இயக்குநர் இமயம் பாரதிராஜாஉடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, நடிகைகள் ரேவதி, ராதிகா, சுகன்யா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் பாரதிராஜா குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

மு.க.ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு, கவிஞர் வைரமுத்து ஆகியோர் உடன் வந்தனர்.

முன்னதாக, தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது.

தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞ னின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *