மாலை வேலையில் சுவைக்க தூண்டும் “காலிஃப்ளவர் மிளகுப் பொரியல்” – செய்முறை விளக்கம்…

உங்கள் சுவையை தூண்டும் காலிஃப்ளவர் மிளகுப் பொரியல் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காலிஃப்ளவர் மிளகுப் பொரியல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

தேவையான பொருட்கள்:-

Advertisements
 •  காலிஃப்ளவர் சிறியது 1,
 •  மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்,
 •  பெரிய வெங்காயம் 2,
 •  உப்பு தேவைக்கு,
 •  எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்
 •  எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.
 •  அரைக்க
 •  மிளகு 1 டேபிள் ஸ்பூன்
 •  சீரகம் 2 டீஸ்பூன்
 •  சோம்பு அரை டீஸ்பூன்,
 •  பட்டை லவங்கம் ஏலக்காய் தலா 1
 •  பூண்டு 6 பல், இஞ்சி 1 சிறு துண்டு

செய்முறை :-

 1. காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு நீர் விட்டு நைஸாக அரையுங்கள்.
 2. எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். பின்னர் காலிஃப்ளவர், தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து மிதமான தீயில், அரை பதத்துக்கு வேக வையுங்கள்.
 3. பிறகு மூடியைத் திறந்து அரைத்த விழுதை சேர்த்து, காய் நன்றாக வேகும்வரை சுருளக் கிளறி இறக்குங்கள்.