மாநில அளவி​லான வங்​கி​யாளர் குழுக் கூட்​டத்​தில், தமிழகத்​துக்​கான ஆண்டு கடன் திட்​டத்தை வெளி​யிட்​ட நிதி அமைச்​சர் மரிய​வில்​சன்!!

சென்னை: ​
மாநில அளவி​லான வங்​கி​யாளர் குழுக் கூட்​டத்​தில், தமிழகத்​துக்​கான ஆண்டு கடன் திட்​டத்தை நிதி அமைச்​சர் மரிய​வில்​சன் வெளி​யிட்​டார்.

இதில் நடப்பு நிதி ஆண்​டுக்​காக, ஒருங்​கிணைந்த கடன் ஒதுக்கீடு ரூ.10.98 லட்​சம் கோடி​யாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

தமிழகத்தின் 186-வது மாநில அளவி​லான வங்​கி​யாளர் குழு (எஸ்​எல்​பிசி) கூட்​டம் சென்​னை​யில் நடை​பெற்​றது. தமிழக நிதி அமைச்​சர் மரிய​வில்​சன் தலைமை வகித்​தார்.

நிதித் துறை செயலர் எம்​.ஏ.சித்​திக், இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​யின் செயல் இயக்​குநரும், மாநில வங்​கி​யாளர் குழுத் தலை​வரு​மான தனராஜ், ரிசர்வ் வங்​கி​யின் தலைமை பொது மேலா​ளர் ராகேஷ் ஸ்ரீவஸ்​த​வா, நபார்டு வங்​கி​யின் தலைமை பொது மேலா​ளர் எச்​. மனோஜ் உள்​ளி்ட்​டோர் பங்​கேற்​றனர்.

கூட்​டத்​தில், நடப்பு நிதி ஆண்​டுக்​கான தமிழகத்​தின் ஆண்டு கடன் திட்​டத்தை நிதி அமைச்​சர் மரிய​வில்​சன் வெளி​யிட்​டார்.

அனைத்து உற்​பத்தி துறை​களுக்​கும் போது​மான அளவிலும், சரி​யான நேரத்​தி​லும் முறைப்​படுத்​தப்​பட்ட நிறுவன ரீதியி​லான கடன் கிடைப்​பதை உறுதி செய்​வது இதன் நோக்​கம் ஆகும்.

நடப்பு நிதி ஆண்​டுக்​காக, அனைத்து வணிக வங்​கி​கள், பிராந்​திய ஊரக வங்​கி​கள் (RRB) மற்​றும் கூட்​டுறவு வங்​கி​கள் ஆகிய​வற்​றின் ஒருங்​கிணைந்த கடன் ஒதுக்​கீடு ரூ.10.98 லட்​சம் கோடி​யாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இதில் பெரும்​பகுதி விவ​சா​யம், சிறு, குறு, நடுத்​தரத் தொழில் நிறு​வனங்​கள் துறை மற்​றும் அரசின் பிறமுன்​னுரிமை துறை​களுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

அனைத்து முன்​னுரிமை துறை​களுக்​கான மொத்த கடன் ரூ.10 லட்​சத்து 98 ஆயிரத்து 38 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

அமைச்​சர் மரிய​வில்​சன் பேசும்​போது, ‘‘கல்விக் கடன்​களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்​டும்.

தகு​தி​யான கல்விக் கடன் விண்​ணப்​பங்​களுக்கு உரிய நேரத்​தில் ஒப்​புதல் அளித்​து, கடன் வழங்​கு​வதை உறு​தி​ செய்​ய​வும், மாணவர்​கள் கடன் பெறு​வதை எளி​தாக்​க​வும், விழிப்​புணர்வை அதி​கரிக்​க​வும் வேண்​டும்.

பொது​மக்​களை அரசின் திட்​டங்​கள் தடங்​கல் இன்றி எளி​தாக சென்​றடைவதை உறு​தி செய்​ய வேண்​டும்​’’ என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *