2 பேருக்கு பாங்காக்கில் மரண தண்டனை!!

பாங்காக்:
தாய்​லாந்​தின் பாங்காக் நகரில் சீனா​விலிருந்து சுற்றுலா வரு​வோர் மத்​தி​யில் மிக​வும் பிரபல​மான ‘எரா​வான்’ வழி​பாட்​டுத் தலம் உள்​ளது.

இங்கு கடந்த 2015 ஆகஸ்ட் 17-ம் தேதி சக்தி​ வாய்ந்த குண்டு வெடித்​த​தில் 20 பேர் உயி​ரிழந்​தனர். 120-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர்.

இந்த குண்​டு​வெடிப்​பு நடந்த சிறிது நேரத்​தில் சீனா​வின் உய்​குர் முஸ்​லிம் சமூகத்தை சேர்ந்த யுசுபு மியரைலி, பிலால் முகமது ஆகிய இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர்.

வீடியோ பதிவு​கள், கைரேகைகள் மற்​றும் பிற ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் இவர்கள் இந்த குண்​டு​ வெடிப்​புடன் தொடர்​புடைய​வர்​கள் என்று குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இந்​நிலை​யில் இந்த வழக்​கில் தெற்கு பாங்​காக் குற்​ற​வியல் நீதி​மன்​றம் இரு​வருக்​கும் நேற்று மரண தண்​டனை விதித்​தது.

இவர்களுக்கு எதி​ராக வலு​வான ஆதா​ரங்​கள் இருப்​ப​தாக​வும் தாங்​கள் குற்​ற மற்​றவர்​கள் என்​பதை நிரூபிக்க அவர்​களால் போது​மான ஆதா​ரங்​களை வழங்க முடிய​வில்லை என்​றும் நீதி​மன்​றம் தெரிவித்​துள்​ளது.

இந்​தக் குண்​டு​வெடிப்பு தொடர்​பாக அதி​காரி​கள் 17 சந்​தேக நபர்களை அடை​யாளம் கண்​டனர்.

ஆனால் 3 பேர் மட்​டுமே கைது செய்​யப்​பட்​டனர். ஆதா​ரங்​கள் இல்​லாத​தால், தாய்​லாந்து பெண் ஒரு​வர் மீதான குற்​றச்​சாட்​டு​கள் 2024-ல் கைவிடப்​பட்​டன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *