பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது – அண்ணாமலை கடும் கண்டனம்!!

சென்னை,
வீ த லீடர்ஸ் (We The Leaders) இயக்கத்தின் தலைவர் அண்ணமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-


த.வெ.க. ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.


தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை.

இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?


சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதல்-அமைச்சர் உறுதி செய்யவேண்டும்.

குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *