ஃபிடே கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கனடாவில் நடைபெற்று வந்தது. எட்டு வீரர்கள் மற்றும் எட்டு வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றனர். தலா இரண்டு முறை தங்களுக்குள் மோத வேண்டும்.
அத்துடன் ரவுண்ட் ராபின் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் வீராங்கனை உலக சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியன் மோதும் வாய்ப்பை பெறுவர் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் 13வது சுற்றுகளின் முடிவில் முகேஷ் 8.5 புள்ளிகள் உடன் முன்னிலையில் இருந்தார்.
நெபோம்நியாச்சி, நகமுரா, காருனா 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தனர். இந்த சூழலில் கடைசி சுற்றான 14வது ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ் அமெரிக்காவின் நகமுராவை கருப்பு நிற காய்களுடன் சந்தித்தார்.
இந்த ஆட்டத்தின் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய இக்கட்டான சூழலில் வீரர்கள் இருவரும் போட்டியை சந்தித்தனர். ஆனால் இப்போட்டியில் குகேஷ் ஆட்டத்தை டிரா செய்தார் .
இதன் மூலம் அவர் 9 புள்ளிகளை பெற்றார். மறுபுறம் நெபோம்நியாச்சி – பேபியானோ காருனா இடையிலான ஆட்டமும் டிரா ஆனதால் முகேஷ் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டார். இதன் மூலம் போட்டியின் முடிவில் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன் மூலம் பிடே கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் வென்ற பெருமையை பெற்றுள்ளார் இந்திய வீரர் முகேஷ். உலக சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை எதிர்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், செஸ் வரலாற்றில் கேண்டிடேட் தொடரில் இளம்வயதில் சாம்பியன் பட்டம் வென்ற 17 வயது வீரர் குகேஷுக்கு வாழ்த்துகள்.
உலக சாம்பியன் டிங் லிரேனுடன் மோதும் வாய்ப்பைப் பெற்றுள்ள குகேஷ், பட்டம் வெல்ல வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.