ஜூன் 4 ஆம் தேதி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தாமரை படர்ந்திருக்கும் – அண்ணாமலை..!

தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசியது வைரலாகி வருகிறது.

அதில் குறிப்பாக, இண்டி கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டுமென திமுக தலைவர்கள் ஏன் துடிக்கிறார்கள் தெரியுமா ? இண்டி கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஸ்டாலின் துணை பிரதமராகி விடுவார், நான் தான் அடுத்த தொலைத்தொடர்பு அமைச்சர், நான் தான் அடுத்த போக்குவரத்து துறை அமைச்சர் என என திமுக நிர்வாகிகள் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.

இதுபோல் தமிழகத்தில் மட்டும் இதுபோன்ற கட்டுக்கதைகள். ஆனால் தமிழ்நாட்டை தாண்டினால் இண்டி கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு எப்போது தேர்தல் முடியுமென்று எதிர் பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் மட்டும் திமுகவினர் மாயை உலகத்தை படைத்து மாய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இவ்வாறு அந்த காணொளியில் பேசியுள்ளார்.

பாஜக ஜெயிக்காதுனு சொன்னவங்க ஜூன் 4 ஆம் தேதி 11 மணிக்கு ரெடியாகி இருங்கள். அப்போது தெரியும். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வென்றிருக்கும். தென்னிந்தியாவில் மட்டும் புதிய பிம்பமாக அதிகப்படியான பாராளுமன்ற உறுப்பினர்களை பாஜக சார்பாக அனுப்புகின்றோம்.

ஜூன் 4 ஆம் தேதி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தாமரை படர்ந்திருக்கும், இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *