மகனை கண்​டதும் கட்​டித் தழுவிய ​ராமதாஸ்!!

விழுப்புரம்:
பாமகவில் ஒன்​றரை ஆண்​டு​களாக நீடித்து வந்த தந்தை – மகன் அதி​காரப் பகிர்வு பிரச்​சினை ராம​தாஸ் திருமண நாளில் முடிவுக்கு வந்​தது. பாமக தலை​வர் அன்​புமணி​யும், நிறுவனர் ராம​தாஸூம் ஒரு​வரையொரு​வர் கட்​டித் தழுவி கண்ணீர் சிந்​தினர்.

பாமக நிறு​வனர் ராம​தாஸூக்​கும் அதன் தலை​வர் அன்புமணிக்கும் இடையி​லான பிரச்​சினை​யால் கடந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் இருதரப்​பும் தனித்​தனி​யாக செயல்​பட்​டனர்.

ராம​தாஸின் மிகக் கடுமை​யான விமர்​சனத்​தை​யும் மீறி சவுமியா அன்​புமணி உள்பட 4 பாமக எம்​எல்​ஏக்​கள் வெற்றி பெற்​றனர். தேர்​தலுக்கு பிறகு அன்​புமணி​யின் கை ஓங்​கியது.

தைலாபுரத்துக்கு வரு​வதை பாமக​வினர் குறைத்​துக் கொண்டனர். யாரை​யும் சந்​திக்​காமல் பொது பிரச்சினைகளுக்காக சில அறிக்​கைகளை மட்​டும் ராம​தாஸ் வெளி​யிட்டு வந்​தார்.

இதற்​கிடை​யில் தந்​தை, மகனை இணைக்க குடும்ப உறவு​களும், முக்​கிய நபர்​களும் மீண்​டும் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதற்காக ராம​தாஸின் திருமண நாள் சரி​யான​தாக இருக்​கும் என நாள் குறிக்​கப்​பட்​டது.

அதன்​பேரில் ராம​தாஸ் – சரஸ்​வதி இணை​யரின் 61-வது திருமண நாளை​யொட்டி அவர்​களிடம் ஆசி பெறு​வதற்​காக அன்​புமணி, அவரது மனைவி சவுமி​யா, மகள்​கள் சம்யுக்​தா, சங்​கமித்​ரா, சஞ்​சுத்​ரா, இரு மரு​மகன்​கள், பேரப்பிள்ளைகள் என அனை​வரும் நேற்று தைலாபுரத்​துக்கு வருகை தந்​தனர்.

ராம​தாஸ் தரப்​பினர் அவர்​களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்​றனர். ஒன்​றரை ஆண்​டு​களாக மகனை சந்​திப்​பதை தவிர்த்து வந்த ராமதாஸ் நேற்று மகனை கண்​டதும் கட்​டித் தழு​வி​னார். இரு​வரும் கண்​ணீர் சிந்​தினர். தாயை​யும் அன்​புமணி அரவணைத்தார்.

மேலும் பேரப் பிள்​ளை​கள் மற்​றும் கொள்ளு பேரப் பிள்ளைகளையும் கொஞ்சி மகிழ்ந்​தார். அப்​போது அன்புமணி, சவுமியா உள்ளிட்ட அனை​வரும் அவர்​களது காலில் விழுந்து ஆசிபெற்​றனர். பின்​னர் ஒன்​றாக அமர்ந்து மதிய உணவு சாப்​பிட்​டனர்.

பின்​னர் அன்​புமணி செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “அப்பா – அம்​மா​வின் 61-வது திருமண நாள். இதனால் குடும்​பத்​துடன் சென்று வாழ்த்​துகளை​யும், ஆசிர்​வாதங்​களை பெற்​றுக் கொண்டோம். இனி நல்​லது நடக்​கும்” என்​றார்.

ஒன்​றரை ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்​தது பாமகவினரை மகிழ்ச்​சி​யில் ஆழ்த்தி இருக்​கிறது.

ராம​தாஸை அன்​புமணி குடும்​பத்​துடன் வந்து சந்​தித்​த​போது அவரது இளைய சகோ​தரி கவிதா உடன் இருந்​தார். ஆனால், மூத்த மகளும் பாமக செயல் தலை​வரு​மான ஸ்ரீகாந்​தி, அவரது மகன் முகுந்​தன் உள்​ளிட்​டோர் புறக்​கணித்​தனர்.

தலை​வர் பதவியை தன்​வசப்​படுத்​திக் கொண்​ட​தாக அறி​வித்த ராம​தாஸ், அன்புமணிக்கு வழங்​கிய செயல் தலை​வர் பதவியை மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு கொடுத்தார்.

தந்தை – மகன் ஒன்​றாக இணைந்தாலும் குடும்​பத்​தில் உள்ள பிரச்​சினை நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருக்​கிறது. பாமக செயல் தலைவர் பதவி​யில் ஸ்ரீகாந்தி இருப்​ப​தால் கட்​சி​யிலும் புகைச்​சல் தொடரும் என கருதப்​படு​கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *