இரு​மொழிக் கொள்​கையை விட்​டுக்​கொடுத்து தான் மத்​திய அரசிடம் நிதி பெற வேண்​டும் என்ற அவசி​யம் இல்லை – அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!!

பெரம்பலூர்:
இரு​மொழிக் கொள்​கையை விட்​டுக்​கொடுத்து தான் மத்​திய அரசிடம் நிதி பெற வேண்​டும் என்ற அவசி​யம் இல்லை.

அதேசம​யம், மத்​திய அரசிடம் இருந்து நிதியை பெறாமல் விட​மாட்​டோம் என பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

பெரம்​பலூர் மாவட்​டத்​தில் 10-ம் வகுப்பு மற்​றும் பிளஸ் 2 பொதுத்​தேர்​வில் சிறப்​பிடம் பெற்ற மாணவ, மாணவி​கள் மற்​றும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்​ளி​களின் தலைமை ஆசிரியர்களுக்​கு பாராட்டு விழா நேற்று நடை​பெற்​றது.

இதில், ஆட்​சி​யர் ஷரண்யா அறி, எஸ்​.பி. லலித்​கு​மார், எம்​எல்ஏ சிவக்குமார் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அமைச்சர் கூறியது:

இரு​மொழிக் கொள்கையை விட்​டுக்​கொடுத்​து​தான் மத்​திய அரசிடம் நிதி பெறவேண்​டும் என்ற அவசி​யம் இல்​லை. அதேசம​யம் மத்திய அரசின் நிதி​யை​யும் பெறாமல் விட​மாட்​டோம்.

முந்​தைய ஆட்​சி​யில் கல்​வித் துறை​யில் ஊழல் பெருகி இருந்​தது. தற்​போது, தவெக ஆட்​சி​யில் நடத்​திய ஆய்​வில் ஒவ்​வொரு துறையாக ஊழல் வெளிவந்​து​கொண்​டிருக்​கிறது.

பள்​ளிக் கல்​வித் துறை​யிலும் ஆய்வு நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த ஆய்​வுக்​குப் பிறகு ஊழல் விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வரும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *