திருப்​பரங்​குன்றம் தீபத் தூண் விவ​காரம்; ஒரு சட்டப் போராட்​ட​மாகவோ அல்​லது மதமோதலா கவோ மாற்​றப்​படக்​கூ​டாது – தமிழிசை வேண்டுகோள்!!

சென்னை:
‘மாநில பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்​தர​ ராஜன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: திருப்​பரங்​குன்​றத்​தில் தீபம் ஏற்​று​வது என்​பது தமிழக இந்​துக்​களின் அடிப்​படை சமய உணர்வு மற்​றும் கலாச்​சார உரிமை​யாகும்.

நீதி​மன்​ற தீர்ப்​புக்​குப் பிறகும், இந்​துக்​களின் உணர்​வு​களுக்கு உரிய மதிப்​பளிக்​கப்​பட​வில்​லை. சிறு​பான்​மையினரைப் பாது​காப்​ப​தாகக் கூறிக்​கொண்​டு, இந்​துக்​கள் முற்​றிலும் ஓரங்​கட்​டப்​பட்​டனர்.

தமிழக மக்​கள் கடந்த காலங்​களில் இத்​தகைய போக்கை நிராகரித்​துள்​ளனர். தற்​போதைய அரசும் அதே பாதை​யில் செல்​வது வருத்​தமளிக்​கிறது.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்​று​வதற்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்தை நாடு​வதன் மூலம், அரசு சட்​டப்​பூர்​வ​மான நடவடிக்​கை எடுப்​ப​தாகக் கருதலாம்.

திருப்​பரங்​குன்றம் தீபத் தூண்விவ​காரம் ஒரு சட்டப் போராட்​ட​மாகவோ அல்​லது மதமோதலாகவோ மாற்​றப்​படக்​கூ​டாது. மாறாக, இது இந்து சமூகத்​தின் உணர்​வுப்​பூர்​வ​மான மற்​றும் கலாச்​சார உரிமை​யாகப் பார்க்​கப்பட வேண்​டும்.

எனவே, திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனு​மதி அளிக்​கு​மாறும், இந்த நீண்​டகால சமய நடை​முறையை கண்​ணி​யத்​துட​ன் நடத்த உறுதி செய்​யு​மாறும் வலி​யுறுத்​துகிறேன் என்று கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *