திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் கடந்த ஒன்றாம் தேதி வெளுத்து வாங்கிய வரலாறு காணாத கனமழையால் தீபலையில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் மண்ணில் புதை உண்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்கப்பட்டது.
மீண்டும் திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை தொழில் நுட்ப வல்லுநர்கள் தற்பொழுது தீப மலையின் மீது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இக்குழுவினர் மலை மீது சென்று மண்ணின் தன்மை, பாறைகளின் நிலை, மலையின் தற்போதைய தோற்றம் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொள்வதுடன் மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்ற கோணத்திலும் ஆய்வு மேற் கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் ஜெய்ப்பூர் செல்கிறார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்கள் திருவண்ணாமலை சம்பவம் தொடர்பாக கூறிய நிலையில், ஓ மை காட் என வருத்தம் தெரிவித்தார்.