சென்னை:
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வைகை நதியை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஒரு உண்மையான பொதுப் பிரச்சினையைச் சுட்டிக்காட் டியதற்காக ஆளுநரை உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் சு.வெங்கடேசன் எம்.பி போன்ற தலைவர்கள் விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது.
மாநில அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், அந்த முயற்சி களுக்கு ஆதரவாக ஆளுநர் மாளிகை களமிறங்கும் என்று தமிழக ஆளுநர் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் வருகை என்பது இங்கு உண்மையான பிரச்சினை அல்ல. நமது ஆறுகள் மாசடைந்த நிலையில் இருப்பதே உண்மையான பிரச்சினை.
தமிழகத்துக்குத் தேவை நடவடிக்கைதான், அரசியல் திசை திருப்பல்கள் அல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.