மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்…

மேஷம்

விடியும்பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும். உத்தியோக அனுகூலமுண்டு.

ரிஷபம்

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வீர்கள்.

மிதுனம்

நட்பு வட்டம் விரிவடையும் நாள். நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும்.

கடகம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். பிறரை விமர்ச்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் அல்லல்கள் உண்டு.

சிம்மம்

யோகமான நாள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

உள்ளம் மகிழும் தகவல் இல்லம் தேடி வரும் நாள். உயர் அதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

துலாம்

புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் புகழ் கூடும்.

விருச்சிகம்

பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும்.

தனுசு

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

மகரம்

உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். இடமாற்றம் இனிமை தரும். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பயணம் பலன் தரும்.

கும்பம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரும். சுபச்செய்தி உண்டு.

மீனம்

மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். செலவுகளை சமாளிக்க நேற்றைய சேமிப்பு கைகொடுக்கும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *