குஜராத்தில் 30 நிமிடம் சிங்கத்திடம் போராடி உயிர் தப்பிய நபர்!!

பாவ்நகர்:
குஜ​ராத் மாநிலத்​தின் பாவ்​நகர் மாவட்​டம் கராஜியா கிராமத்​துக்​குள் சிங்​கம் ஒன்று நேற்று புகுந்​தது. அது ஒரு பசு மாட்டு கூடாரத்​தின் அருகே பதுங்​கி​யிருந்​தது.

அப்​போது பசுக்​களுக்கு தீவனம் போடச் சென்​ற உரிமையாளர் பார்மர் மீது சிங்​கம் பாய்ந்து அவர் தப்ப முடி​யாமல் கால்​களால் அழுத்தி பிடிக்​குள் வைத்​திருந்​தது.

அவரது அலறல் சத்​தம் கேட்டு அக்​கம் பக்​கத்​தினர் ஓடி வந்து சிங்​கத்தை விரட்ட முயன்​றனர். ஆனால், அவரின் கை சிங்​கத்​தின் வாயிலும், அவரது கால் சிங்கத்தின் கால்​களுக்​குள்​ளும் சிக்​கி​யிருந்​தது.

அரு​கில் இருந்​தவர்​கள் தொலை​வில் இருந்​த​படியே கூச்​சல் எழுப்பி​யும், சிங்​கத்​தின் மீது கற்​களை எறிந்​தும் தாக்​குதல் நடத்தினர். இதனால் சிங்​கம் இவரை இழுத்​துச் செல்​லாமல் அரை மணி நேரம் அந்த இடத்​திலேயே அமர்ந்​திருந்​தது.

ஒரு கட்​டத்​தில் கூட்டம் அதி​க​மானவுடன் பார்​மரை விட்டு விட்டு அரு​கில் இருந்த பசு மாட்டை நோக்கி சிங்​கம் சென்​றது. சிங்​கம் பார்​மரை ஆக்ரோஷ​மாக கடிக்​காமல் தனது பிடிக்​குள் மட்​டும் வைத்திருந்ததால் அவர் உயிர்​ தப்​பி​னார்.

அதற்​குள் கிராமத்​தினர் பார்​மரை மீட்டு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். இந்த வீடியோ சமூக ஊடகத்​தில் வைரலாக பரவியது.

இச்​சம்​பவம் குறித்து வனத்​துறை​யினருக்கு தகவல் தெரி​விக்கப்பட்டது. இது குறித்து வனத்​துறை அதி​காரி​கள்​ விசாரணை நடத்​தி வருகின்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *