அரசு வழக்​கறிஞர் நியமனம் தகுதி அடிப்​படை​யில் 100 சதவீதம் வெளிப்​படை​யாக​வும், நேர்​மை​யாக​வும் நடை​பெறுகிறது; அமைச்சர் நிர்மல் குமார்!!

சென்னை:
அரசு வழக்​கறிஞர் நியமனங்​கள் 100 சதவீதம் நேர்​மை​யாக​வும், நியாய​மாக​வும் நடை​பெற்று வரு​வ​தாக சட்​டத் துறை அமைச்​சர் நிர்​மல் குமார் தெரி​வித்​தார்.

இதுகுறித்து அவர் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் செய்தியாளர் களிடம் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் அரசு வழக்​கறிஞர் பணி​யிடங்​களுக்கு 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட விண்​ணப்​பங்​கள் வந்​துள்​ளன.

மாவட்ட ஆட்​சி​யர்​கள் தலை​மை​யில் அனைத்து ஆவணங்​களும் சரி​பார்க்​கப்​பட்​டு, தகு​தி​யானவர்​களின் பட்​டியல் தயாரிக்​கப்​பட்டு வரு​கிறது.

கடந்த 45 ஆண்​டு​களில் இல்​லாத அளவுக்கு இந்த முறை அரசு வழக்​கறிஞர் நியமனம் தகுதி அடிப்​படை​யில் 100 சதவீதம் வெளிப்​படை​யாக​வும், நேர்​மை​யாக​வும் நடை​பெறுகிறது.

அனைத்து நிர்​வாக நடை​முறை​களும் முடிந்த பிறகே தற்​போது அரசாணை​கள் வெளி​யாகத் தொடங்​கி​யுள்​ளன. அதற்கு முன்பு எந்த நியமன​மும் செய்​யப்​பட​வில்​லை.

பணி நியமனங்​களில் பணம் வாங்​கியதாகவோ, அமைச்​சர்​கள் அல்​லது பிறரின் பெயரைப் பயன்​படுத்தி யாராவது மோசடி​யில் ஈடு​பட்​டாலோ, பொது​மக்​கள் புகார் அளிக்​கலாம். தயக்​கமின்றி உடனே நடவடிக்கை எடுக்​கப்​படும்.

மக்கள் பிரதிநிதிகள் தேவை​யில்​லாமல் அரசு அலு​வல​கங்​கள், மருத்​து​வ​மனை​கள் உள்​ளிட்ட இடங்​களில் ஆய்​வு நடத்தி அரசு ஊழியர்​களுக்கு தொந்தரவு கொடுக்​கக்​கூ​டாது என்று முதல்​வர் விஜய் ஏற்​கெனவே அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

அதேசம​யம் அவர்கள் தங்​களது சொந்த ஊர்​களில் உள்ள பள்​ளி​களுக்​குச் சென்று எம்​எல்ஏ நிதி மூலம் தேவை​யான வசதி​களை செய்து தரு​வது தவறல்ல. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *