சென்னை:
தவெக தலைமையில் கூட்டணி அமையவில்லை; மு.க.ஸ்டாலின் உடனான நட்பு இன்னும் தொடர்கிறது’ என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் கூறியதாவது: தவெக ஆட்சி அமைக்க 2 இடங்கள் பற்றாக்குறை இருந்ததால் ஆதரவு கோரி எங்களுக்கு கடிதம் வந்தது. அ
ப்போது விசிக வெளியில் இருந்துதான் ஆதரவு என தெரிவித்தோம். பின்னர் 10 நாட்கள் கழித்துதான் அமைச்சரவையில் இடம்பெற்றோம்.
அதேநேரம், இன்னும் திமுக கூட்டணியில் இருக்கிறீர்களா? என என்னிடம் கேட்டால், ஆம். திமுக கூட்டணியில் இருப்பதாகவே உணர்கிறோம். இதுவே என் பதில்.
தற்போதுவரை தவெக கூட்டணியில் விசிக இணைய அதிகாரப்பூர்வமாக எந்த நிகழ்வும் நடைபெறவில்லை, தவெக கூட்டணி தொடர்பாக ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 1-ம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
ஆனால் அந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. எனவே தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையவில்லை என்பதுதான் இன்றைய நிலை.
விசிக அமைச்சரவையில் இடம் பெற்றதும் திமுகவுக்கு துரோகம் செய்து விட்டோம் என விமர்சிக்கின்றனர்.
பதவி என்றவுடன் ஒரு கூட்டணியை உதறிவிட்டு நாங்கள் ஓடிவிடவில்லை, எடுக்கின்ற முடிவுகள் ஒவ்வொன்றையும் கூட்டணி தலைமையான மு.க.ஸ்டாலினிடம் பகிர்ந்து கொண்டோம். அந்த உறவு இன்னும் தொடர்கிறது.
இந்நிலையில்தான் விசிகவில் அதிருப்தியில் இருந்த பொறுப்பாளர் ஒருவர் விலகி, திமுகவில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த ஆதங்கத்தில்தான் விருது வழங்கும் விழாவில் அவ்வாறு பேசினேன். இவ்வாறு அவர் கூறினார்.