சென்னை:
விவசாயிகளுக்கு வழிகாட்டுவதற்காக ‘கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம்’ எனும் புதிய திட்டத்தை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத், சென்னையில் தொடங்கி வைத்தார்.
தமிழக வேளாண்மை துறை ‘கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம்’ எனும் புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இதன்மூலம், காணொலி வாயிலாக விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்கள் பிரச்சினைகளுக்கு ஒரே தளத்தில் தீர்வு வழங்க மாநில அளவிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் வேளாண் மற்றும் அதுசார்ந்த தோட்டக்கலை, மீன்வளம், பால்வளம், வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்புசென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், வங்கி உட்பட பல்துறைகளின் நிபுணர்களும் இருப்பார்கள்.
இந்த திட்டத்தின் தொடக்க விழா, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேளாண்மை துறை அமைச்சர் ர.வினோத் திட்டத்தை தொடங்கி வைத்து, காணொலி வாயிலாக பல்வேறு மாவட்டங்களின் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில், வேளாண்மை துறை செயலர்பொ.சங்கர், இயக்குநர் க.வீ.முரளிதரன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் (காணொலி வாயிலாக) பங்கேற்றனர்.