சிங்​கப்​பூருக்கு சிகிச்​சைக்​குத்​தான் சென்​றேன்; நான் ஓடி ஒளிய​வில்​லை, வரும் 15ம் தேதி விசாரணைக்கு நிச்​ச​யம் ஆஜராவேன்!! எ.வ.வேலு தகவல்!!

சென்னை:
“சிங்​கப்​பூருக்கு சிகிச்​சைக்​குத்​தான் சென்​றேன்; நான் ஓடி ஒளிய​வில்​லை, வரும் 15ம் தேதி விசாரணைக்கு நிச்​ச​யம் ஆஜராவேன்” என, முன்​னாள் அமைச்​சர் எ.வ வேலு தெரி​வித்​துள்​ளார்.

நெடுஞ்​சாலைத்​துறை டெண்​டர் ஒதுக்​கீட்​டில், ரூ.3.23 கோடி முறை​கேடு செய்​த​தாக, முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு உள்​ளிட்​டோர் மீது லஞ்ச ஒழிப்​புத்​துறை வழக்​குப்​ப​திவு செய்​தது.

கடந்த 25-ம் தேதி தமிழகம் முழு​வதும் சோதனை நடத்​தப்​பட்​டது. மேலும் நேரடி​யாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்​புத்​ துறை வேலு​வுக்கு சம்​மன் அனுப்​பியது.

அவருக்கு உடல்​நிலை சரி​யில்​லாத​தால் விசா​ரணைக்கு ஆஜராக​வில்​லை. விளக்க மனு​வின் அடிப்​படை​யில் அவரது வழக்​கறிஞர்​கள் கால அவகாசம் பெற்​றனர்.

அதே​நேரத்​தில் வேலு தப்பி வெளி​நாடுக்கு ஓடி​விட்​ட​தாக சமூக வலைத்​தளங்​களில் வெளி​யான தகவல்​கள் பரபரப்பை ஏற்​படுத்​தின.

இந்த நிலை​யில்​ சிகிச்சை முடித்து நேற்று வேலு சென்னை திரும்​பிய​போது செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

நான் சிங்​கப்​பூரில், மவுன்ட் எலிசபத் மருத்​து​வ​மனை​யில், இதயம் தொடர்​பான சிகிச்சை மற்​றும் மருத்​துவப் பரிசோதனை​களை தொடர்ந்து மேற்​கொண்டு வரு​கிறேன்.

அந்​த வகை​யில் மீண்​டும் பரிசோதனைகு செல்ல வேண்​டிய நிலை ஏற்​பட்​டது.

இதற்​காக கடந்த மாதம் 15-ம் தேதி விசாவுக்கு விண்​ணப்​பித்​தேன்; 17-ல் விசா கிடைத்​தது. 25-ல் டிக்​கெட் முன்​ப​திவு செய்​தேன். அன்​றைய தினம் என் வீட்​டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்​தினர்.

அதற்கு முழு ஒத்​துழைப்பு அளித்​தேன். அன்​றைய பயணத்தை ரத்து செய்​து, மறு​நாள் 26-ம் தேதி சிங்​கப்​பூர் சென்​றேன்.

அங்கு ஒவ்​வாமை சிகிச்​சைக்​காக பல நாட்​கள் தொடர் கண்​காணிப்​பில் இருக்க வேண்​டிய நிலை ஏற்​பட்​டது.

சிங்​கப்​பூரில் மருத்​துவ பரிசோதனை​யில் இருந்​த​போது, லஞ்ச ஒழிப்​புத்​ துறை சம்​மன் அனுப்​பிய​தாக தகவல் கிடைத்​தது. உடனடி​யாக வழக்​கறிஞர் மூலம் கடிதம் அனுப்பி 10 நாட்​கள் அவகாசம் கேட்​டேன்.

மீண்​டும் நோட்டீஸ் அனுப்​பப்​பட்ட போதும் சிகிச்சை முடிந்த பிறகு, விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு அளிப்​பேன் என எழுத்​துப்​பூர்​வ​மாக தெரி​வித்​தேன்.

ஓடுறாங்க, ஒளி​யுறாங்க என்ற குற்​றச்​சாட்​டு​களில், எந்த உண்​மை​யும் இல்​லை. நான் ஓடி ஒளிய​வில்​லை.

சிங்​கப்​பூரில் சிகிச்​சைக்​கான ஆதா​ரங்​கள் அனைத்​தும் என்​னிடம் உள்​ளது. வரும் 15-ம் தேதி விசா​ரணைக்கு நிச்​ச​யம் ஆஜராவேன்.

ஜூலை 12-ம் தேதிக்​குப் பிறகு, எந்த தேதி​யில் அழைத்​தா​லும், விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு அளிப்​பேன். நீதித்​துறை​யின் மீது முழு நம்​பிக்கை உள்​ளது என்று​ கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *