மேகேதாட்டு அணை தொடர்பாக ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கர்நாடகா செல்கிறார்; தமிழக முதல்வர் விஜய் – வேளாண் அமைச்சர் தகவல்!!

கும்பகோணம்:
“மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், அம்மாநிலத்துக்குச் செல்கிறார்” என தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார்.

கும்பகோணத்தில் இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணைக் கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. காவிரி நமது உரிமை. அதை விட்டுக் கொடுக்க மாட்டோம், ஆரம்பத்திலிருந்தே இதுதான் எங்களது நிலைப்பாடு.

கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி மேகேதாட்டு அணை தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் விஜய் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் பேசவுள்ளார்.

கர்நாடக அரசு தரப்பில் போதிய மழை இல்லை தண்ணீர் திறக்க முடியாது எனக் கூறினாலும், தமிழக முதல்வர் விஜய் நமது உரிமையை கேட்டுப் பெறுவார்” என்று அமைச்சர் வினோத் கூறினார்.

பருவமழை பொய்த்ததன் காரணமாக, நடப்பாண்டு வழக்கத்தை விட மிகக் குறைவாகவே குறுவை சாகுபடி செய்யப்பட்டது. மேட்டூர் அணை திறக்கப்படாதது மற்றும் காவிரி நீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *