”மம்மூட்டியைப் போல பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் நடிக்க முடியாது” -வித்யா பாலன்!!

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘காதல் தி கோர்’.

இப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கினார். இது மம்முட்டியின் சொந்த தயாரிப்பு படமாகும். 14 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜோதிகா மீண்டும்

இப்படத்தில் மம்மூட்டி தன்பால் ஈர்ப்பாளர் வேடத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகரான மம்முட்டி தயங்கும் விஷயத்தை எப்போதும் மிக சாதரணமாக் செய்துவிடுபவர் ஆவார். ‘காதல் தி கோர்’ படத்தில் தன்பால் ஈர்ப்பாளராக நடித்திருந்த மம்மூட்டியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இப்படத்திற்கு பல வித விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் மலையாள கிளாசிக் படங்களை பார்த்துள்ளார்.ஒரு பேட்டியில் வித்யாபாலன் கூறியதாவது :-

மம்முட்டி நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் நான் ”காதல் தி கோர்’ படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார். இதை மம்முட்டியிடம் தெரிவிக்க துல்கருக்கு மெசேஜ் அனுப்பினேன்.

மம்முட்டி நடித்தது மட்டுமின்றி படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, பெருமைக்குரிய சமூகத்தை ஊக்குவிக்க முடியும். ஒரு இந்தி நடிகர் இப்படி ஒரு படத்தை ஏற்கவே மாட்டார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களால் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது .கேரளாவில் முற்போக்கான பார்வையாளர்கள் உள்ளனர். அதுதான் முக்கிய வேறுபாடு. கேரளாவில் ஒரு நடிகர் தன் இமேஜைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

கேரள சினிமா ரசிகர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். சினிமா கலைஞர்களை மிகவும் மதிக்கிறார்கள்”. என்றார்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *