சென்னை:
“உதயநிதி ஸ்டாலின் பேசியதை திமுகவினர் தங்களது வீடுகளில் போட்டுக் காட்டட்டும்.
அவர் பேசியதில் ஒரு வார்த்தையாவது ஏற்புடையதாக இருக்கிறதா?” அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், அவதூறு பேச்சுகளுக்கு எதிராக தவெக அரசும், காவல் துறையும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.
உதயநிதி ஸ்டாலின் பேசியதை திமுகவினர் அவர்கள் வீடுகளில் போட்டுக் காட்டட்டும்.
அவர் பேசியதில் ஒரு வார்த்தை ஏற்புடையதாக இருக்கிறதா? இவ்வளவு கீழ்த்தரமா, கேவலமாக பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
காவிரி, மேகேதாட்டு பற்றி தான் பேச சென்றார். எழுதிக் கொடுத்ததை பேசிவிட்டு வந்திருக்க வெண்டும்.
உதயநிதிக்கு எதிர்க்கட்சி தலைவராக இல்லை. எம்எல்ஏவாக இருக்கக் கூட தகுதி இல்லை.
பெண்கள் பற்றி இவ்வளவு வக்கிரமான எண்ணங்களை வைத்துள்ளார்.
சட்டப்பேரவைக்குள் வரவே உதயநிதிக்கு தகுதி இல்லை. புகாரின் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜெயலலிதாவைப் பற்றியே உதயநிதி அவதூறாக பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதும்கூட நடவடிக்கை எடுக்கவில்லை.
பெண்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.