மருத்​து​வப் படிப்​பில் அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கான 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டை அதி​கரிக்க நீதிபதி தலை​மை​யில் குழு அமைக்​கப்​படும்; அமைச்சர் அருண்ராஜ் தகவல்…

சென்னை:
‘‘மருத்​து​வப் படிப்​பில் அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கான 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டை அதி​கரிக்க நீதிபதி தலை​மை​யில் குழு அமைக்​கப்​படும்’’ என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் நீட் தேர்​வால் அரசுப் பள்ளி மாணவர்​களின் மருத்​து​வ​ராகும் கனவு வீணாகி விடக்​கூ​டாது என்ற எண்​ணத்​தில் கடந்த 2020-ம் ஆண்டு அப்​போதைய அதி​முக அரசு, மருத்​து​வப் படிப்​பில் அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டை கொண்​டு​வந்​து, படிப்​புக்​கான முழு செல​வை​யும் அரசு ஏற்​ப​தாக அறி​வித்​தது.

இதனால், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்​ளி​களில் படித்த மாணவர்​கள் பயன்​பெற்று வரு​கின்​றனர்.

அதன்​படி, இந்த இடஒதுக்​கீட்​டின் மூலம் கடந்த 2020-21-ம் ஆண்​டில் 435 பேர், 2021-22-ல் 555 பேர், 2022-23-ல் 584 பேர், 2023-24-ம் ஆண்​டில் 625 பேர், 2024-25-ம் ஆண்​டு 625 பேர், 2025-26-ம் ஆண்​டில் 630-க்​கும் மேற்​பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவி​கள் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களில் சேர்ந்​தனர்.

அரசு பள்ளி மாணவர்​களுக்​கான 7.5 சதவீத உள் இடஒதுக்​கீடு அமலுக்கு வந்து 6 ஆண்​டு​கள் ஆகி​யுள்​ள​தால், இடஒதுக்​கீட்டை உயர்த்த தமிழக அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் கூறும்​போது, ‘‘7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டை உயர்த்​து​வது தொடர்​பாக மறு ஆய்வு செய்ய இருக்​கிறோம். அதற்​காக நீதிபதி தலை​மை​யில் குழு அமைக்​கப்பட உள்​ளது’’ என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *