புரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’!! கெத்து காட்டும் தபு….

சென்னை:
புரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’ படத்தில் தபு கதாபாத்திரத்தை சொல்லும் கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்தப் படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி உள்ள நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் கிளிம்ப்ஸ், தபுவை அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

படத்தில் அவர் கவுரி ஹெக்டே என்ற கதாபாத்திரத்தில், கெத்து காட்டும் வருமான வரித்துறை அதிகாரியாக வருகிறார்.

கடமையில் கண்டிப்புடன் இருக்கும் அவர், அதிகாரம் செலுத்துபவராகவும், ஆளுமை மிக்கவராகவும் இருக்கிறார். இந்த அதிரடியான அந்தத் தோற்றம் தபுவுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது.

தெலுங்கு இயக்​குநர் புரி ஜெகந்​நாத் இயக்​கி வரும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதியுடன் சம்​யுக்​தா, தபு, துனியா விஜய்​கு​மார், பிரம்​மாஜி, விடிவி கணேஷ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

ஹர்​ஷவர்​தன் ரமேஷ்வர் இசை அமைத்துள்​ள படத்துக்கு சாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணி​கள் நடைபெற்று வரும் இந்தப் படத்தை புரி கனெக்ட்ஸ் மற்​றும் ஜே.பி. மோஷன் பிக்​சர்ஸ் நிறு​வனங்​கள் இணைந்து தயாரித்துள்ளன.

பான் இந்தியா படமாக வர இருக்கும் இந்தப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *