17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கருட சேவையில் கீழே சரிந்த பெருமாள் – பக்தர்கள் அதிர்ச்சி!!

வரதராஜப் பெருமாள் கோயில் திருவொற்றியூரில் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள விஷ்ணு கோயிலாகும் . இக்கோயில் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. வரலாற்று ரீதியாக பத்மபுரம் என்று அழைக்கப்படும் இக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானது .

இங்கு பெருந்தேவி சன்னதி இறைவனுக்கு இடப்புறம் அமைந்துள்ளது. தாமரை இதழாக வடிவமைக்கப்பட்ட மேடையில் நவக்கிரகங்களுக்கான சன்னதிகள் நிறுவப்பட்டுள்ளன. மகிழம் மரம் கோயிலின் தல விருட்சமாகவும், வைகானசம் பூஜையாகவும் உள்ளது.

இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக நடந்த கருட சேவை நிகழ்ச்சியின்போது, பல்லக்கின் தண்டு உடைந்து பெருமாள் சிலை கீழே சரிந்தது. இதன் காரணமாக பட்டாச்சாரியார்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் பெருமாள் சிலை தூக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கருட சேவை உற்சவத்தில் ஏற்பட்ட இச்சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *