பூந்தமல்லியில் பல்லி விழுந்து கிடந்த உணவை சாப்​பிட்ட 3 பள்​ளி​களின் 19 மாணவ-​மாணவி​களுக்கு வாந்​தி, மயக்​கம்!!

பூந்தமல்லி:
பல்லி விழுந்து கிடந்த உணவை சாப்​பிட்ட 3 பள்​ளி​களின் 19 மாணவ-​மாணவி​களுக்கு வாந்​தி, மயக்​கம் ஏற்​பட்​டது.

தமிழக அரசின் சார்​பில் அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் காலை உணவு மாங்​காடு பகு​தி​யில் உள்ள தனி​யார் கேட்​டரிங் நிறு​வனம் தயாரிக்​கப்​பட்​டு, மாங்​காடு, குன்​றத்​தூர், பூந்​தமல்​லி, திரு​மழிசை பகு​தி​களில் உள்ள 12 அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் பயிலும் 1,300-க்​கும் மேற்​பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிறு​வனத்​தின் உணவுக் கூடத்​தில் நேற்று காலை உணவாக பொங்​கல் தயாரிக்​கப்​பட்டு வாக​னங்​கள் மூலம் பள்​ளி​களுக்கு விநி​யோகம் செய்​யப்​பட்​டது. முதலில் பூந்​தமல்​லி-சிவன்​கோ​யில் தெரு​வில் உள்ள அரசு உதவி​பெறும் பள்​ளிக்கு வழங்​கப்​பட்​டது.

அதை மாணவர்​கள் சாப்​பிட்​டுக் கொண்​டிருந்த நிலை​யில் அதில் பல்லி இறந்​துகிடந்​தது தெரிய​வந்​தது.

அந்த உணவை சாப்​பிட்ட 11 மாணவ, மாணவி​களுக்கு லேசான வாந்​தி, மயக்​கம் ஏற்​பட்​டதையடுத்​து, அவர்​கள் பூந்​தமல்லி அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இதே​போல் பூந்​தமல்லி வரத​ராஜபெரு​மாள் கோயில் பின்​புறம் உள்ள ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்​ளி​யில் 7 பேரும், கீழ்​மாநகர் அரசு தொடக்​கப் பள்​ளி​யில் ஒரு மாணவி என 8 பேருக்கு வாந்​தி, மயக்​கம் ஏற்​பட்டு பூந்​தமல்லி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இதில், 2 பேருக்கு வயிற்று வலி இருந்​த​தால், அவர்​கள் மேல்​சிகிச்​சைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

சிகிச்சை பெற்று வந்த 19 பேரும் மாலை​யில் பத்​திர​மாக வீடு திரும்​பினர்.

தொடர்ந்து பல்​வேறு துறை​களின் அதி​காரி​கள் குறிப்​பிட்ட பள்​ளி​களி​லும், உணவு தயாரிப்பு கூடத்​தி​லும் ஆய்வு மேற்​கொண்​டனர்.

பள்​ளி​களில் வழங்​கப்​பட்ட உணவு மாதிரி​கள் கிண்​டி​யில் உள்ள ஆய்​வகத்​துக்கு சேதனைக்​காக அனுப்​பப்​பட்​டது.

ஆய்​வின் முடி​வில் தவறுகள் இருப்​பது தெரிய வந்​தால் சம்​பந்​தப்​பட்ட நிறு​வனம் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *