ஜெய்​ஸ்​வால், அசிதா பெர்​னாண்டோ ஆகிய இரு​வருக்​கும் போட்​டிக்​கான ஊதி​யத்​தில் இருந்து தலா 25 சதவீதம் அபராதம் விதிப்பு!!

துபாய்:
இந்​தியா – இலங்கை அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கொழும்​பில் உள்ள சிங்​களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

இதன் முதல் நாள் ஆட்​டத்​தில் 17-வது ஓவரின் போது இலங்கை அணி​யின் வேகப்​பந்து வீச்​சாளர் அசிதா பெர்​னாண்டோ பந்​து​வீச்​சில் இந்​திய தொடக்க பேட்​ஸ்​மே​னான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் ஆட்​ட​மிழந்​தார்.

அப்​போது அசிதா பெர்​னாண்டோ வசை​பாட இரு​வருக்​கும் இடையே வாக்​கு​வாதம் நடை​பெற்​றது. வாக்​கு​வாதத்​தின் இடையே ஜெய்​ஸ்​வாலின் ஹெல்​மெட் அசிதா பெர்​னாண்​டோ​வின் நெற்​றி​யில் உரசி​யது.

இந்​நிலை​யில் இந்த விவ​காரத்​தில் ஜெய்​ஸ்​வால், அசிதா பெர்​னாண்டோ ஆகிய இரு​வருக்​கும் போட்​டிக்​கான ஊதி​யத்​தில் இருந்து தலா 25 சதவி​கிதம் அபராத​மாக விதித்து ஐசிசி உத்​தர​விட்​டுள்ளது.

மேலும் இரு​வருக்​கும் தலா ஒரு தகுதி இழப்​புப் புள்​ளி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *