சென்னை மாநக​ராட்​சிக்​கு உட்​பட்ட பகு​தி​களில் பெரு​மளவு குப்​பைகளை உரு​வாக்​குபவர்​கள் வரும் செப். 1-ம் தேதி முதல் கட்​டா​யம் குப்​பைகளை தரம் பிரித்து வழங்க வேண்​டும்; சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!!

சென்னை:
சென்னை மாநக​ராட்​சிக்​கு உட்​பட்ட பகு​தி​களில் பெரு​மளவு குப்​பைகளை உரு​வாக்​குபவர்​கள் வரும் செப். 1-ம் தேதி முதல் கட்​டா​யம் குப்​பைகளை தரம் பிரித்து வழங்க வேண்​டும் என மாநக​ராட்சி அறி​வுறுத்​தி​யுள்​ளது.

சென்னை மாநக​ராட்சி சார்​பில் பொது​மக்​களிடையே குப்​பைகளை தரம் பிரித்து வழங்​கும் பழக்​கத்தை உரு​வாக்​கும் நோக்​கில் ‘குப்​பையை பிரிப்​போம் நாளையை காப்​போம்’ என்ற 40 நாள் வீடு​களுக்​கான சிறப்பு விழிப்​புணர்வு நிகழ்ச்சி திட்​டம் கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது.

இத்​திட்​டத்​தின் கீழ் முதல்​கட்​ட​மாக தென்​சென்னை மண்​டலங்​களான வளசர​வாக்​கம், ஆலந்​தூர், அடை​யாறு, பெருங்​குடி மற்​றும் சோழிங்​கநல்​லூர் ஆகிய பகு​தி​யில் மொத்​தம் 50 ஆயிரம் வீடு​களை சென்​றடை​யும் வகை​யில் இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி ஒவ்​வொரு மண்​டலத்​தி​லும் 10 ஆயிரம் வீடு​கள் தேர்வு செய்​யப்​பட்​டு, விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக அடை​யாறு 179-வது வார்​டுக்கு உட்​பட்ட குப்​பம் கடற்​கரை சாலை​யில் விழிப்​புணர்வு நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

தெற்கு வட்​டார துணை ஆணை​யர் அஃதாப் ரசூல், அப்​பகு​தி​யில் உள்ள பொது​மக்​களுக்கு வீடு​வீ​டாக சென்று மக்​காத குப்​பைகளை தனி​யாக சேகரித்து வழங்​கு​வதற்​கான பிரத்​யேகப் பை மற்​றும் விழிப்​புணர்வு துண்டு பிரசுரங்​கள் வழங்​கி​யும், வீடு​களின் சுவற்​றில் விழிப்​புணர்வு ஸ்டிக்​கர்​களை ஒட்​டி​யும் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தி​னார்.

இதற்​கிடையே பெரு​மளவு குப்​பைகளை உரு​வாக்​குபவர்​களிடத்​தி​லும் விழிப்​புணர்வு ஏற்​படுத்​திடும் வகை​யில், அவர்​களு​டன் கலந்​துரை​யாடல் கூட்​டம் நடத்தி விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

அதில் பெரு​மளவு குப்​பைகளை உரு​வாக்​குபவர்​கள் வரும் செப்​டம்​பர் 1-ம் தேதி முதல் கட்​டா​யம் குப்​பைகளை தரம் பிரித்து வழங்க வேண்​டும் எனவும் மாநக​ராட்சி தரப்​பில் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்​நிகழ்​வில் அடை​யாறு மண்டல அலு​வலர் காளி​தாஸ், செயற்​பொறி​யாளர் ரங்​க​நாதன்​ உள்​ளிட்​டோர்​ பங்கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *