விவ​சா​யிகளிடம் கையகப்​படுத்​தப்​பட்ட நிலங்​கள் திருப்​பித் தரப்​படுமா என்​பது குறித்து சட்ட வல்​லுநர்​களிடம் கலந்​தாலோ​சித்​து​தான் கூற முடி​யும்!! அமைச்​சர் ஏ.ராஜ்மோகன்…

சென்னை:
பரந்தூர் விமான நிலைய திட்​டம் ரத்து செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், அந்த திட்​டத்​துக்​காக விவ​சா​யிகளிடம் கையகப்​படுத்​தப்​பட்ட நிலங்​களை திருப்​பிப் தரு​வது குறித்து சட்ட வல்​லுநர்​களிடம் கலந்​தாலோ​சித்த பிறகே முடிவு எடுக்​கப்​படும் என்று அமைச்​சர் ஏ.ராஜ்மோகன் கூறி​னார்.

தமிழ் தென்​றல் திருவி​க-​வின் 143-வது பிறந்​த​நாளை முன்​னிட்டு சென்னை எழும்​பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்​ககத்​தில் திருவிக படத்​துக்கு பள்​ளிக் கல்வி மற்​றும் தமிழ் வளர்ச்​சித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் நேற்று மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

பரந்​தூர் விவ​சா​யிகளிட​மிருந்து நிலத்தை பறித்​தது என்​பது தாயை​யும், குழந்​தையை​யும் பிரித்​ததற்கு சமம். தமிழகத்​துக்கு விவ​சாய​மும் வேண்​டும், விமான நிலை​ய​மும் வேண்​டும்.

இதன் காரண​மாக அனைத்து தரப்பு மக்​களிட​மும் இதுகுறித்து கலந்​தாலோ​சிக்க வேண்​டிது அவசி​யம்.

பரந்தூர் விமான நிலை​யத்​துக்​காக கையகப்​படுத்​தப்​பட்ட நிலங்​களுக்​கான இழப்​பீட்​டுத் தொகையை ஒருசில விவ​சா​யிகளுக்கு கொடுத்​துள்​ளனர். அதே​நேரத்​தில் சிலருக்கு வழங்​க​வில்​லை.

இந்த உலகத்​தில் எல்லா பெரிய வன்​முறை​களும் வளர்ச்சி என்ற வார்த்​தை​யின் மூலம் தான் தொடங்​கி​யிருக்​கும்.

எனவே, ஒரு நிலை​யான வளர்ச்சி தான் வேண்​டும் என்​ப​தற்​காக பரந்​தூர் விவ​காரத்​தில் சொன்​னதை செய்​தார் முதல்​வர் விஜய்.

சுமார் ஆயிரம் ஆண்​டு​கள் தாண்​டிய தொல்​லியல் பொக்​கிஷம் கம்​பன் கால்​வாய் பரந்​தூரில் தான் இருக்​கிறது. அங்​கிருந்து தான் கடைமடை ஏரி​களுக்கு தண்​ணீர் வரும்.

அப்​படி வந்​தால் தான் பல்​லா​யிரக்​கணக்​கான பறவை​கள் வந்து இனப்​பெருக்​கம் செய்​யும்.

இது தொல்​லியல் தொடர்​புடையது மட்​டுமல்ல, சுற்​றுச்​சூழல் சங்​கிலியும் ஆகும்.

பரந்​தூரில் விமான நிலை​யம் வேண்​டாம் என்று சொல்​லி, ஆயிரம் நாட்​களைக் கடந்து பொது​மக்​கள் போராட்​டம் நடத்​தி​யுள்​ளனர்.

விவ​சா​யிகளிடம் கையகப்​படுத்​தப்​பட்ட நிலங்​கள் திருப்​பித் தரப்​படுமா என்​பது குறித்து சட்ட வல்​லுநர்​களிடம் கலந்​தாலோ​சித்​து​தான் கூற முடி​யும்.

விவ​சா​யிகளுக்கு சாதக​மாகவே அரசின் செயல்​பாடு​கள் இருக்​கும். எதை​யும் அவசரப்​பட்டு சொல்லி விட முடி​யாது.
நீதி​மன்​றத்​தில் வழக்கு இருக்​கிறது. எனவே, அனைத்து தரப்​பினரிட​மும் கலந்​தாலோ​சித்து நல்ல முடிவு எடுக்​கப்​படும்.

உலகத் தமிழ் மாநாடு நடத்​து​வ​தில் எந்​த​வித​மான தொய்​வும் இல்​லை. இளம் தலை​முறை​யினருக்கு தமிழ் உணர்வு இருக்​கிறது.

ஆனால் அதை தமிழிலேயே வெளிப்​படுத்​து​வதற்​கான வெளிப்​பாடு இல்​லை.

அவ்​வளவு​தான். அவர்​களை​யும் அரவணைக்​கும் சூழல் இருப்​ப​தால், உலகத் தமிழ் மாநாடு நடத்​து​வ​தில் கால​தாமதம் ஏற்​படு​கிறது.

அந்த வகை​யில் உலகத் தமிழ் மா​நாடு நடத்​து​வது தொடர்​பாக முதல்​வர் முடி​வெடுத்​துள்​ளார். அதற்​காக குழு அமைக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *