விரைவில் சிறையில் இருந்து விடுதலை ஆகி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வாக்குறுதி நிச்சயம் நிறை வேற்றுவேன் – டெல்லி முதல்வர்..!

மதுபான ஊழல் புகாரில் கைது செய்யப்பட்ட முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி திகார் ஜெயிலில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரை சந்தித்து பேசுவதற்காக சிறை நிர்வாகத்திடம் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா அனுமதி கேட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

“எதற்காக அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறித்து எந்த காரணத்தையும் சிறை நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்றும், மோடி அரசின் உத்தரவின் போரில்தான் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாகவும்”, ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. இதன் மூலம் மோடி அரசு நிர்வாகம் மனிதாபிமானமற்ற முறையில் அனைத்து வரம்புகளையும் மீறி நடந்து கொள்கிறது” இன்று ஆம் ஆத்மி கட்சி கூட்டம் சாட்டில் இருந்தது.

இந்நிலையில் இது குறித்து பேசிய மூத்த சிறை அதிகாரி, கைதி ஒருவர் சிறைக்குள் வாரம் இருமுறை மட்டுமே பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார். இதன் அடிப்படையில் சந்திப்பு தேதியை மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தி இருந்தோம்” என்று அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.

ஆனால் ஆமாம் கட்சித் தலைவர்கள் இதை ஏற்க மறுத்து விட்டனர். ஜெயில் விதிமுறைகளின்படி கைதி ஒருவரை வாரத்திற்கு இருமுறை பார்வையாளர்கள் சந்திக்கலாம். ஒரே நேரத்தில் இருவர் சந்திக்கவும் அனுமதி உள்ளது. வாரத்திற்கு அதிகபட்சமாக நாலு பேர் சந்திக்கலாம்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கெஜ்ரிவாலை சந்தித்து பேசுவதற்கு அவருடைய மனைவி சுனிதாவுக்கு சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து சுனிதா டெல்லி அமைச்சர் அதிஷியுடன் சென்று முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின் அமைச்சர் அதிஷி தனது சமூக வலைத்தள பதிவில் கோரி இருப்பதாவது:-

” முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் தன்னை பற்றி கவலைப்படவில்லை. அவருடைய கவலை எல்லாம் 2 கோடி டில்லி மக்களை பற்றி தான். இந்திய சந்திப்பு முழுவதும் டெல்லி அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பற்றிய தகவலை அவர் கேட்டு தெரிந்து கொண்டார். இந்தக் கோடை காலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு வராமல் பார்த்துக் கொள்ளும்படி எங்களுக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும் டெல்லியில் வசிக்கும் தாய்மார்கள் சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு செய்தி ஒன்றையும் அவர் அனுப்பி இருக்கிறார். விரைவில் சிறையில் இருந்து விடுதலை ஆகி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றுவேன் என்பதுதான் அந்த செய்தியாகும்” ‌.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *