சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் செய்தியாளர்களிடம் அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ் கூறியதாவது: தவெக அரசின் 100 நாட்கள் செயல்பாடு நன்றாக உள்ளது.
மாணவர்கள் போதைக்கு அடிமை ஆவதைத் தடுக்க விளையாட்டுகளை ஊக்குவிப்பதாக கூறியுள்ளனர். ஒலிம்பிக் போட்டிக்கு தயார்படுத்தும் மையங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. எம்எல்ஏக்கள் கேட்கும் கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருகின்றனர்.
அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கை உள்ளது. மத்திய அரசிடம் நிதி பெற்று வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்துகின்றனர். இவ்வாறு கூறினார்.