இந்திய ‘ஏ’ அணியில் அனுகுல் ராய் சேர்ப்பு!!

புதுடெல்லி:
இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’, ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 9 முதல் 21 வரை இலங்கையில் உள்ள தம்புலா நகரில் நடைபெறுகிறது.

இந்தத் தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணி ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்தது.

இதில் இடம் பெற்றிருந்த ஹர்ஷ் துபே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

இதனால் அவருக்கு பதிலாக தற்போது இந்தியா ‘ஏ’ அணியில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அனுகுல் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *