ஆசிரியர் தின விழாவில் 396 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: அமைச்சர் ராஜ்மோகன் இன்று வழங்குகிறார்!!

சென்னை:
ஆசிரியர் தின விழாவில் 396 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் இன்று (செப்.5) வழங்கவுள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப். 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ எனும் மாநில நல்லாசிரியர் விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டுக்கான விருதுக்கு தகுதியான 396 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அரசுப் பள்ளிகளில் 342 பேர், தனியார் பள்ளிகளில் 38, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகள் தலா 2, மாற்றுத்திறன் ஆசிரியர்கள் 2, எஸ்சிஇஆர்டி பேராசிரியர்கள் 10 பேர் இடம்பெறுவார்கள்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (செப்.5) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதற்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பி.சந்தரமோகன் தலைமை வகிக்கவுள்ளார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேர்வான ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கவுள்ளார்.

இந்த விருது ரூ.10,000 ரொக்கம், 36.5 கிராம் வெள்ளிப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *