கிருஷ்ணகிரியில் வசித்து வருபவர் சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா. இவர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நேற்று பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், என் அப்பாவை வைத்து எத்தனையோ கட்சிகள் அரசியல் செய்து விட்டார்கள்.
அவருடைய மகளாகிய நான் வந்திருக்கிறேன். என்னை கிரிமினல் பேக்ரவுண்ட் என்று சொல்கிறார்கள். வீரப்பன் மரத்தை வெட்டினார். யானையை கொன்றார்னு சொல்றாங்க. சரி மரத்தை வெட்டினார், கிரிமினல் பேக்ரவுண்ட் எல்லாமே சரி.
இப்படி பேசுறீங்களே இத்தனை அரசியல்வாதிகளை பார்த்து நான் கேட்கிறேன். உங்கள் சொத்து பட்டியலை உங்களால் வெளியிட முடியுமா ?தைரியம் இருந்தால் திராணி இருந்தால் வெளியிடுங்க டா பாக்கலாம்.
நான் வெளியிட தயார். அரசு என்றால் என்ன? தேர்தல் நேரத்தில் கரண்ட் கட் செய்துவிட்டுபணம் விநியோகிப்பதா? மணல் அள்ளுவதா? மலையை வெட்டுவதா, படிச்சு முடிச்சு வெளிய வந்தா வேலை இல்ல. தயவு செய்து புரிஞ்சுக்கோங்க. இது போன்ற ஆட்களை நீங்கள் தான் மாற்ற வேண்டும். இல்லையென்றால் உங்கள் குழந்தைகள் உங்களையும் அடிப்பார்கள்; அவர்களையும் அடிப்பார்கள்.
இங்கு இருக்கிற எம்.,பி, எம்எல்ஏக்கள் எல்லாம் என்ன நினைக்கிறாங்க . நாம வளரலாம் நம்ம குடும்பம் வளரலாம் , நம்ம சார்ந்து இருக்கிறவங்க வளரலாம். அரசியல் என்பது என்ன நான் வளர்வது அல்ல, என் குடும்பம் வளர்வது அல்ல, என்னை சார்ந்தவர்களை வளர்ப்பது அல்ல அரசியல் என்பது ஒரு சேவை.
இந்த சமுதாய வளர்வது.இதை நான் செய்து காட்ட காட்டுகிறேன். ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் நான் பாடம் எடுப்பேன் . அப்போது உங்களுக்கு புரியும் என் சித்தப்பா ஏன் எனக்கு இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார் என்பது.
அப்படிப்பட்ட ரத்தத்திற்கு பிறந்துவிட்டு நான் எப்படி கேள்வி கேட்க மாட்டேன் என்று நீங்கள் நினைத்தீர்கள். உங்களுடைய அனைத்து தப்பையும் , அனைத்து அயோக்கியத்தனத்தையும் நான் குழந்தையிலிருந்து பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். வாய்ப்பு எதிர்பார்த்து நான் அமைதியாக இருந்தேன்.
அந்த வாய்ப்பை என்னுடைய சித்தப்பா என்னுடைய தந்தையின் ஆசியுடன் அளித்திருக்கிறார். இப்ப நான் சும்மா இருப்பேன்னு நினைக்கிறீங்களா டா..என்று ஆவேசமாக பேசினார்.