கோவை:
கோவை வேலந்தாவளம் பகுதியில் நேற்று நடைபெற்ற யோகா கல்லூரி நிகழ்வில், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம், விசிக தலைவர் தொல்.திருமாவ ளவன் எம்.பி, தமிழக அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் திருமாவளவன் எம்.பி. கூறியதாவது:
இந்நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சரிடம் மலைவாழ் மக்களுக்கு அவர்களுடைய நலத்திட்டங்களை மேம்படுத்துதல், வீடு கட்டுதல், சாதிச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினேன்.
மதச்சார்பற்ற கொள்கையை கடைபிடிக்கும் போது, ஒரு அமைப்போ அல்லது அரசோ மதம் சார்ந்த பிரச்சாரம் செய்யக்கூடாது.
அது மக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும். பட்டியல் இன மக்களுக்கு முதல்வர் பதவி எப்போது கிடைக்கும் என்று கேட்கிறீர்கள்.
அவர்கள் இன்னும் ஒரு அரசியல் சக்தியாக வலிமை பெற வேண்டும். அவ்வாறு வலிமை பெற்றால் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.