சட்டம் – ஒழுங்கு குறித்து நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் வெறும் பஞ்ச் டயலாக் மட்டுமே ; முதல்வர் பதிலுரை மீது உதயநிதி விமர்சனம்!!

சென்னை:
“சட்டம் – ஒழுங்கு குறித்து நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் வெறும் பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி டைவர்சன் செய்திருக்கிறார் முதல்வர் விஜய்” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதே ஆக்டிங், பஞ்ச் டயலாக் பேச்சுக்கள்; ரீல்ஸுக்காக மட்டுமே முதல்வர் விஜய் பேசிவிட்டு சென்றுள்ளார்.

யாரோ எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்துவிட்டு வந்து வாந்தி எடுத்துள்ளார் .

சட்டம் – ஒழுங்கு குறித்து நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் வெறும் பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி டைவர்சன் செய்திருக்கிறார்.

தமிழகத்தில் ஊழல் செய்து தண்டிக்கப்பட்ட முதல்வர் யார் என உங்களுக்கு தெரியும்.

எங்கள் மீதான அமலாக்கத்துறை உட்பட அனைத்து வழக்குக ளையும் சட்டப்படி சந்திக்கத் தயார்.

இரு நாட்களுக்கு முன்பு கே.என்.நேரு வீட்டில் சோதனை நடத்தி ஒன்றும் இல்லை என பேட்டி கொடுத்துள்ளனர்.

கோடநாட்டில் போய், தன்னுடைய பட ரிலீஸுக்காக வாட்ச் மேன் வேலை பார்த்தவர் தான் நம்முடைய முதல்வர்.

அமலாக்கத் துறை கூறியதாக பேசியதெல்லாம் வெறும் குற்றச்சாட்டுகள்தான்; எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

பேரவையில் திமுக மீது பல பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வைத்தார் முதல்வர் விஜய். அதற்கு விளக்கம் அளிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்தோம்.

தவெக அரசுக்கும் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கும் முழுக்க முழுக்க ஜால்ரா அடித்துள்ளார் பேரவைத் தலைவர்; முதல்வர் பேசி முடித்ததும் வாய்ப்பு தருவதாக சொன்ன பேரவைத் தலைவர் ஏதோ துண்டு சீட்டை பார்த்ததும் வாய்ப்பு தர மறுத்துவிட்டார்.

15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததாக முதல்வர் மீது கூட வருமான வரி வழக்கு செய்திருக்கிறது.

நீங்கள் ஆட்சிக்கு வந்ததை நம்புங்கள், எங்கள் மீது பழி போடாமல் பேச வேண்டும் எனக் கூறினேன்.

திமுக ஆட்சி நடக்கிறது என்ற நினைப்பில் பொய்யான குற்றச்சாட்டுகளை முதல்வர் கூறுகிறார்.

திங்களன்று பதில் சொல்கிறேன் எனக் கூறி ஓட்டப் பந்தயத்தில் ஓடியது போல ஓடினார்.

இன்று மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் போட்டி போல பேரவையில் தவறான, பொய்யான குற்றச்சாட்டுகளை ஒப்பித்துள்ளார்.

விஷ்ணு ரெட்டி, அவரின் மச்சான் சுஜய் ரெட்டி, அவரின் நண்பர் அணில் ரெட்டி இவர்கள் அனைவரும் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்.

ஏன் மைன்ஸ் பொறுப்பை அவர்களிடம் கொடுத்துள்ளீர்கள். அதற்கான ஆதாரங்களை நாங்கள் வெளியிடுவோம்.

மிசாவைப் பற்றி பேச முதல்வருக்கு என்ன அருகதை இருக் கிறது. இவர் அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து” என்று காட்டமாக பதிலடி கொடுத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *