மாடம்பாக்கம் பகுதியில் 16 தெரு​நாய்​கள் அடுத்​தடுத்து உயிரிழப்பு!!

மாடம்​பாக்​கம்:
மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர், ஏஎல்​எஸ் நகர் உள்​ளிட்ட பகு​தி​களில் கடந்த சில நாட்​களில் 16 தெரு​நாய்​கள் அடுத்​தடுத்து உயி​ரிழந்து கிடந்​த​தாக கூறப்​படு​கிறது.

அதிர்ச்​சி​யடைந்த பொது​மக்​கள் நாய்​களுக்கு விஷம் வைத்து கொல்​லப்​பட்​டிருக்​கலாம் என சந்​தேகம் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து தாம்​பரம் மாநக​ராட்சி அதி​காரி​களுக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டதுடன், சேலை​யூர் காவல் நிலை​யத்​தி​லும் புகார் அளிக்​கப்​பட்​டது.

இதையடுத்து மாநக​ராட்சி அதி​காரி​களும், போலீ​ஸாரும் இது தொடர்​பாக விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

உயி​ரிழந்த நாய்​களின் உடல்​களை கால்​நடைத் துறை​யினர் கைப்​பற்​றி, உடற்​கூறாய்வு மற்​றும் மருத்​து​வப் பரிசோதனை மூலம் இறப்​புக்​கான காரணத்​தைக் கண்​டறி​யும் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

பரிசோதனை முடிவு​களுக்​குப் பின்​னரே நாய்​கள் விஷம் வைத்து கொல்​லப்​பட்​டதா அல்​லது நோய் தாக்​குதல் காரணமா என்​பதை உறு​தி​செய்ய முடி​யும் என அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

மேலும் சம்​பவம் நடை​பெற்ற பகு​தி​களில் பொருத்​தப்​பட்​டுள்ள சிசிடிவி கேமரா காட்​சிகளை​யும் போலீ​ஸார்​ ஆய்​வு செய்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *