தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி அக்டோபர் 1 தமிழகம் முழுவதும் ஆர்ப் பாட்டம்: கம்யூனிஸ்ட்டுகள் அறிவிப்பு!!

சென்னை:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி அக்டோபர் 1 அன்று தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) விடுதலை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான கூட்டறிக்கையில், “இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குள் நடந்த மிகப்பெரிய சதியை, அதிகார அத்துமீறல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூன்று தேர்தல் ஆணையர்கள் கூட்டாக ஒருமனதாக முடிவு எடுத்து செயல்பட வேண்டும்.

இணக்கம் காண முடியாத பிரச்சினைகளில் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்ற கோட்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையர் அப்பட்டமாக மீறி உள்ளார்.

அவரது விருப்பப்படி, மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களையும், ஆட்சேபணைகளையும், எதிர்ப்பையும் நிரகாரித்து, சர்வாதிகாரப்போக்கோடு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்பட்டுள்ளார்.


ஒன்றிய பாஜக அரசின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட்டுள் ளார். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடை முறை களை சீர்குலைத்துள்ளார் என்ற உண்மை தற்போது வெளி வந்துள்ளது.

நியாயமான தேர்தல் நடைமுறைகளை நிலை நிறுத்தவும், வாக்காளர்களின் வாக்குரிமையை பாதுகாக்கவும் தேர்தல் ஆணையத்தின் மற்ற இரண்டு ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்துவும், விவேக் ஜோஷியும், கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக தலைமை தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம், வாக்காளர் பதிவு செய்வதற்கான படிவம் 6-ல் “சட்டவிரோதமான”, “அனுமதி யற்ற” மாற்றங்கள் செய்தல் மற்றும் தேர்தல் வாக்காளர் பட்டியல் மென்பொருளை மையப்படுத்துதல் உள்ளிட்ட முடிவுகளுக்கு அவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித் துள்ளனர்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான கட்டுப்பாடுகள் மையப் படுத்தப்படுவது குறித்து, இரண்டு தேர்தல் ஆணையர்களும் மத்திய அமைச்சரவை செயலாளரிடமும் முறையிட்டுள்ளனர்.

இதன் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையரின் அதிகார அத்துமீறல் ஒன்றிய அரசின் கவனத்துக்கு கொண்டுவரபட்டும், அது கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபணைகள் அனைத் தும் புறக்கணிக்கப்பட்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிய ஆளும் கட்சியான பாஜக, தங்களுக்கு ஆதரவான வர்களை மட்டும் வாக்காளர்களாகத் நீடிக்க தேர்தல் ஆணை யம் மூலம் அனுமதிப்பதும், அதற்காக தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக மாற்றுவதும் சுதந்திரமான தேர்தல் என்பதை அர்த்தமிழக்க செய்து விட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர் பட்டியலிலிருந்து பெருமளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் மையக் கருவியாக செயல்பட்டுள்ளார்.

இதன் மூலம் அரசியலமைப்புச் சட்ட ரீதியான ஜனநாயக அமைப்பான தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது.

அவர் இனியும் அந்தப் பதவியில் தொடர்வதற்கு முற்றிலும் தகுதியற்றவராகிவிட்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்க, அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

இந்தியத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவுகளையும், அவை எடுக்கப்பட்ட விதத்தையும் உச்சநீதிமன்றம் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த நெருக்கடியை, 2023ஆம் ஆண்டு பாஜக அரசு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக் கும் முறையில் செய்த மாற்றங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணைய ர்கள் நியமனச் சட்டம், 2023 மூலம் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்த, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாகப் பிரதமர் நியமிக்கும் மத்திய அமைச்சரவை அமைச்சர் ஒருவர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்.

அந்த மாற்றம் ஜனநாயக நிறுவனமான தேர்தல் ஆணைய த்தின் சுதந்திரத்தன்மையை பலவீனப் படுத்திவிட்டது.

ஒன்றிய ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாற வழிவகுத்துவிட்டது.

இந்த மாற்றம் ரத்து செய்யப்பட்டு, பழைய முறையே கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பு மிகவும் தெளிவான ஒன்றாகும்.

வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப் பதற்கான உரிமையி னையும், அச்சமின்றி வாக்களிக்கும் வாய்ப்பையும் பாதுகாத்து உறுதி செய்வதே அதன் முதன்மை கடமையாகும். தேர்தல் ஆணையம் எந்தச் சூழ்நிலையிலும் அந்தக் கடமையை கைவிடக்கூடாது என வலியுறுத்துகிறோம்.

கோடிக்கணக்கான வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை யை பறித்து, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது தாக்குதலை நடத்தியமைக்கும், சீர்குலைத்தமைக்கும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும்.

உடனடியாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) விடுதலை வலியுறுத்துகின்றன.

இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வரும் வியாழக்கிழமை (01.10.2026) இடதுசாரி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நாடு தழுவிய இந்தப் போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *