தீரன் சின்னமலை வரலாற்றைப் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய, முதல் சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலை அவர்கள் பிறந்த தினம் இன்று.
வீரத்தின் அடையாளமாக விளங்கிய தீரன் சின்னமலை அவர்கள், ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். மூன்று போர்களில் ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தவர். ஓடா நிலைக் கோட்டை கட்டி கொங்கு மண்ணை ஆண்டவர்.
மாவீரன் தீரன் சின்னமலையின் அளவில்லா கொடைகளும், எண்ணற்ற ஆலயத் திருப்பணிகளும், என்றும் அவரது புகழைக் கூறும். தீரன் சின்னமலை வரலாற்றைப் போற்றி வணங்குகிறோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் , ஆங்கிலேய படைகளை தீரமிகு எதிர்கொண்ட கொங்கு மண்ணின் மைந்தனும், கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவருமான.

தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினமான இன்று, தாய் நாட்டின் மேலுள்ள அவரது அன்பையும், எதிரிகளை எதிர்கொண்ட அவரது தீரத்தையும் என்றும் நினைவு கொள்வோம்.என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.