நான் அந்த மாதிரி எல்லாம் பேசவில்லை -அந்த வீடியோவில் இருப்பது அனைத்துமே சித்தரிக் கப்பட்டது!! தாராபுரம் தொகுதியில் நான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாச த்தில் வெற்றி பெறுவேன் ; சத்யபாமா!!

தாராபுரம்:
“நான் அந்த மாதிரி எல்லாம் பேசவில்லை. அந்த வீடியோவில் இருப்பது அனைத்துமே சித்தரிக்கப்பட்டது.

தாராபுரம் தொகுதியில் நான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என வைரல் வீடியோ குறித்து தவெக வேட்பாளர் சத்யபாமா விளக்கம் அளித்துள்ளார்.

மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்​ளது. தொடர்ந்து வாக்​கு​கள் வரும் 9-ம் தேதி எண்ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்பட உள்​ளன.

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார். திமுக சார்பில் சுகன்யாவும், அதிமுக சார்பில் பானுமதியும், நாதக சார்பில் கார்த்திகாவும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணனும் போட்டியிடுகின்றனர்.

இந்தச் சூழலில், தேர்தலில் ரூ.31 கோடி செலவழித்ததாக சத்யபாமா பேசியது போன்ற வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று வாக்குப்பதிவு தொடங்கியியதை அடுத்து, காலையில் மதுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை தவெக வேட்பாளர் சத்யபாமா பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சத்யபாமாவிடம் வைரல் வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்த அவர், “நான் அந்த மாதிரி எல்லாம் பேசவில்லை. அந்த வீடியோவில் இருப்பது அனைத்துமே சித்தரிக்கப்பட்டது.

இந்தக் காணொலியை பரப்பியது யார் என்று தெரியவில்லை. எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இதுபோன்ற வீடியோக்களை பரப்புகிறார்கள்.

இந்த வீடியோ தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்காது. மக்கள் தெளிவாக உள்ளனர்.

இந்த வீடியோ குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும். தாராபுரம் தொகுதியில் நான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *