இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றி பெறும் என்றெல்லாம் ஒன்றும் இல்லை; இந்த முறை இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெறும் – திமுக வேட்பாளர் பரந்தாமன்!!

மதுராந்தகம்:
“இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றிபெறும் என்றெல்லாம் ஒன்றும் இல்லை.

இந்த முறை இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெறும். மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெறும்” என திமுக வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்தார்.

மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடை​பெறவுள்​ளது. தொடர்ந்து வாக்​கு​கள் வரும் 9-ம் தேதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்பட உள்​ளன.

மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் ​(தவெக), பரந்​தாமன் (தி​முக), கணிதா சம்​பத்​(அ​தி​முக), சுகந்தி (மார்க்​சிஸ்ட்), ஜானகி​ரா​மன் (நாம் தமி​ழர்) மற்​றும் சுயேட்​சை​கள் உட்பட 27 பேர் களத்​தில் உள்​ளனர்.

மதுராந்தகம் தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், திமுக வேட்பாளர் பரந்தாமன் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் உற்சாகமாக வாக்களிக்கின்றனர்.

மக்கள் வாக்களிக்க வரிசையில் நிற்கும்போது கூட முகமல ர்ச்சியோடு என்னை வரவேற்கிறார்கள்.

அவர்கள் ஒரு நல்ல முடிவை எடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. மதுராந்தகம் வாக்காளர்கள் திமுகவுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்ல காத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதையும் நான் மீறவில்லை. தவெகவின் புகாரை சட்டரீதியாக சந்திக்கத் தயாராக உள்ளேன்.

தவெகவின் குதிரைபேரத்தை வெட்ட வெளிச்சமாக்கி விட்டதால் ஆதவ் அர்ஜுனா பதறிவிட்டார். அவர் கொடுத் துள்ளது உப்புசப்பில்லாத புகார். அந்தப் புகாரை நீதிமன்ற த்துக்கு கொண்டு சென்றால் திமுக சந்திக்கத் தயாராக உள்ளது.

இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றி பெறும் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த முறை இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெறும்.

மதுராந்தகத்தில் திமுகவின் உதயசூரியன் சின்னம் வெற்றி பெறும். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.

சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது, அவை உடனடியாக சரி செய்யப்பட்டது. காவல் துறை, தேர்தல் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *