பட்​டினப்​பாக்​கத்​தில் தலை​மைச் செயல​கம் அமைப்பது தொடர்​பான விவ​காரத்​தில் முதல்​வர் விஜய் அனைவருக்​கும் ஏற்ற வகை​யில் ஒரு நல்ல முடிவை எடுப்​பார் ; அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!!

சென்னை:
பட்​டினப்​பாக்​கத்​தில் தலை​மைச் செயல​கம் அமைப்பது தொடர்​பான விவ​காரத்​தில் முதல்​வர் விஜய் அனைவருக்​கும் ஏற்ற வகை​யில் ஒரு நல்ல முடிவை எடுப்​பார் என்று அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை வரு​வாய் மாவட்ட அளவி​லான தடகள போட்​டிகள் (2026- 27) பெரியமேடு ஜவஹர்​லால் நேரு விளை​யாட்டு அரங்​கில் நேற்று தொடங்​கியது.

பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்​து, பள்ளி மாணவர்​களின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்​றுக்​கொண்​டார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

பட்டினப்பாக்கத்​தில் தலை​மைச் செயல​கம் அமைப்​பது தொடர்பாக கள ஆய்வு செய்த அதி​காரி​கள், அப்​பகுதி மக்​கள் மற்றும் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் ஆகியோரின் கருத்து களை கேட்​டறிந்து இறு​தி​ முடிவு எடுக்க முதல்​வருக்கு சில அவகாசம் தேவை.

இவ்​விவ​காரத்​தில் முதல்​வர் விஜய் அனைவருக்​கும் ஏற்ற வகை​யில் ஒரு நல்ல முடிவை எடுப்​பார். தமிழகத்​தில் சிங்​கப்​பெண் திட்​டம் தொடங்​கப்​பட்டு பின்பு பல்வேறு நல்ல விஷ​யங்​கள் நடந்​துள்​ளன.

பல பெண்​கள் காப்​பாற்​றப்​பட்​டுள்​ளன. இத்​திட்​டம் மேலும் விரிவாக்​கம் செய்​யப்​படும்​போது, இதன் தாக்​கம் இன்​னும் அதிகமாக இருக்​கும்.

இடைத்​தேர்​தலை பொறுத்​தவரை தவெகவின் வெற்றி உறு​தி​செய்​யப்​பட்​டுள்​ளது.

பொது​வாக இடைத்​தேர்​தலின் போது ஆளுங்​கட்​சி​யின் ஆதிக்​கம், அதி​கார துஷ்பரயோகம் இருக்​கும்.

ஆனால் முதல்​முறை​யாக இடைத்தேர்தல் எந்​த​வித வன்​முறை​யும் இன்றி மிக​வும் நாகரிகமாக நடை​பெற்​றுள்​ளது.

தவறான தகவல்: மதுரை அழகர்கோயி​லில் தமிழ் எழுத்​துகளை நீக்​கி​விட்​டு, இந்தி எழுத்​துகளை மட்​டுமே வைத்​திருப்​ப​தாக யாரோ ஒரு​வர் வாட்​ஸ்-​அப்​பில் வதந்தி பரப்​பி​ உள்​ளார்.

ஆனால் அங்கு தமிழ் எழுத்​துகள் நீக்​கப்​படவே இல்​லை. அதே​போல் தேர்தலுக்​காக ரூ.31 கோடி செலவு செய்​த​தாக வேட்​பாளர் சத்யபாமா பேசி​ய​தாக, ஒட்​டி, வெட்​டி, ஏஐ மூலம் மாற்றி தயார் செய்​யப்​பட்ட வீடியோ ஒன்றை வெளி​யிட்​டனர்.

திட்​ட​மிட்டு ஒடுக்கப்​பட்ட சமூகத்தை சார்ந்த பெண் வேட்​பாளர் மீது மாற்று கட்​சி​யினர் கருத்து வன்​முறையை திணிக்​கிறார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *