நாளை மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்கு எண்ணிக்கை!!

செங்கல்பட்டு/தாராபுரம்:
தமிழகத்தில் காலியாக இருந்த மதுராந்தகம் (தனி), தாராபுரம்(தனி) சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது.

மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தாராபுரத்தில் 80.25 சதவீதம் பதிவானது.

மதுராந்தகத்தில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு தேர்தல் பணியாளர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இதே போல் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூரில் உள்ள எல்.ஆர்.ஜி. கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள காப்பறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது.

இரு தொகுதிக ளிலும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் முன்னிலை நிலவரம் தெரிய வரும்.

வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? – மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 93.22 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 6.96 சதவீதம் குறைந்துள்ளது.தாராபுரத்தில் 80.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் 89.9 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது 9.65 சதவீதம் குறைவாக வாக்குப் பதிவானது.

இடைத்தேர்தல் என்பதால் பொதுத்தேர்தலைப் போன்ற ஆர்வம் இல்லாதது, வெளியூர்களில் வசிக்கும் வாக்காளர்கள் பலர் சொந்த ஊருக்கு திரும்பி வந்து வாக்களிக்காதது, தேர்தல் நாளில் நிலவிய கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவு குறைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும் தமிழ்நாடு தேர்தல் வரலாற்றை உற்றுநோக் கினால், பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தல்களில் சராசரி யாக 5 சதம் முதல் 10 சதம் வரை வாக்குப்பதிவு குறைவது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில் 2 தொகுதிகளிலும் தற்போது பதிவான வாக்குகள் இடைத்தேர்தல் வரலாற்றில் அதிகமான வாக்குப்பதிவு சதவீதங்களில் ஒன்று தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *