விவசாயிகள் – மாணவர்கள் – செவிலியர்கள் என ஜனநாயக வழியில் போராட்டம் செய்யும் எந்தப் பிரிவினரையும் நேரில் அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா? – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!!

சென்னை:
விவசாயிகள் – மாணவர்கள் – செவிலியர்கள் என ஜனநாயக வழியில் போராட்டம் செய்யும் எந்தப் பிரிவினரையும் நேரில் அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா?

என தவெக தலைமையிலான தமிழக அரசை சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லிக்கு போராட செல்லும் இளைஞர்களை ஆங்காங்கே கைது செய்யும் ஓனர்களின் பாணியில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னைக்கு வந்து போராடவிருந்த பன்னோக்கு மருத்துவப்பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைக்கும் இந்த ஃசோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மருத்துவப்பணியாளர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போராட்டத்திற்குப் புறப்படும் முன்பே வீட்டில் வைத்து கைது செய்யும் அளவுக்கு இந்த ரீல்ஸ் அரசு அராஜகம் செய்வது ஏன்?

விவசாயிகள் – மாணவர்கள் – செவிலியர்கள் என ஜனநாயக வழியில் போராட்டம் செய்யும் எந்தப் பிரிவினரையும் நேரில் அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா?

மருத்துவப்பணிகளின் முதுகெலும்பாக இருக்கும் பன்னோக்கு பணியாளர்களை உடனே விடுதலை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த டம்மி முதல்வர் முன்வர வேண்டும்.

அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *